அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சனத் ஜயசூரிய சந்தித்துள்ளார்

அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சனத் ஜயசூரிய சந்தித்துள்ளார்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 9:53 pm

தபால் சேவை பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய நேற்று கண்டி அஸ்கிரிய பீடத்திற்கு சென்றிருந்தார்.

புதிய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட சனத் ஜயசூரிய, அஸ்கிரிய பீடத்தின் சென்று, ஆசிகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

சனத் ஜயசூரிய அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்பீத்த தேரருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

சனத் ஜயசூரிய தெரிவித்த கருத்து :-

ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள வந்தேன்.

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் தெரிவித்த கருத்து :-

கிரிக்கெட் சபையின் பணிகளையும் முன்னெடுக்கின்றீர்களா?

சனத் ஜயசூரிய தெரிவித்த கருத்து :-

ஆம். சபையின் தலைவராக இருக்கின்றேன். அந்த பணிகளையும் நான் முன்னெடுத்து வருகின்றேன்.

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் தெரிவித்த கருத்து :-

பொதுமக்களுடன் இணைந்து செயற்படும் போது, அந்த பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்..-

தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய

“கடிதமொன்று காட்டு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டமை குறித்து விசாரணைகள் நடாத்தப்படுகின்றன. குறித்த நபரை நாம் இடைநிறுத்தியுள்ளோம். தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபால் திணைக்களத்தின் பொறுப்புக்களை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். அமைச்சின் செயலாளர், பிரதி அமைச்சர் என்ற ரீதியில் நாம் ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்தும் திணைக்களத்தின் பணிகளை  சிறந்த முறையில் வெற்றிகரமாக கொண்டு செல்ல முயற்சிப்பேன்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்