ஹம்பாந்தோட்டையில் யூ-ரிப்போட் பயிற்சிப் பட்டறை

ஹம்பாந்தோட்டையில் யூ-ரிப்போட் பயிற்சிப் பட்டறை

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 10:12 pm

நியூஸ் பெஸ்ட் நாடுபூராகவும் முன்னெடுத்து வரும் யூ-ரிப்போட் பயிற்சிப் பட்டறையின் மற்றுமொரு கட்டம் ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்றது.

தங்காலை பிரதேச செயலகத்தில் இந்த நிகழ்வு ந​டைபெற்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யூ-ரிப்போட்டர்கள் எம்முடன் இணைந்து கொண்டிருந்தனர்.

மக்கள் செய்தி வழங்குவதின் பெறுமதி தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஐந்தாவது யூ-ரிப்போட் செயற்றிட்டம் இதுவாகும்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதுவப்படுத்தும் நூற்றுக்கும் அதிகமான யூ-ரிப்போட்டர்கள் தமது உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர்.

யூ-ரிப்போட்டர்களை பதிவு ​செய்யும் நிகழ்விற்கு பின்னர் மக்களே செய்தி வழங்கும் முறை தொடர்பாக நீயூஸ்பெஸ்ட் குழுவினரால் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.

செய்தி அறிக்கையிடல் தொடர்பாக நியூஸ் ​பெஸ்ட் செய்திப்பிரிவினரால் செய்முறையூடாகவும்  விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்