வேர்ணன் தோட்டத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு

வேர்ணன் தோட்டத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 4:00 pm

ஹட்டன், பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேர்ணன் தோட்டத்தின் மத்திய பிரிவில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்மலை ஓயாவை அண்மித்த பகுதிகளிலேயே அதிக குரங்குகளின் நடமாட்டம் காணப்படுவதாக அந்த பகுதி மக்கள் கூட்டிக்காட்டுகின்றனர்.

கொத்மலை ஓயாவை அண்மித்த சிறிய காட்டுப்பகுதியில் சஞ்சரிக்கும் குரங்குகள், குடியிருப்புகளை நோக்கி வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுப்பொருட்களை உண்ணுவதுடன், பொருட்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முன்னர் ஒருசில குரங்குகளே குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்ததாகவும், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வருவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்