வர்த்தகரை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டவர் கைது

வர்த்தகரை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டவர் கைது

வர்த்தகரை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டவர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 7:29 pm

கட்டுநாயக்க, ஆடிஅம்பலம பகுதியில் வர்த்தகரொருவரையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி பணம் மற்றும் கடனட்டைகள் என்பவற்றை கொள்ளையிட்ட சம்பவத்தின் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகர் தனது குடும்பத்தாருடன் பயணித்துக்கொண்டிருந்த போது, இன்று அதிகாலை 1 மணியளவில் மற்றுமொரு காரில் சென்ற குழுவினர் வீதியை இடைமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, 38 ஆயிரம் ரூபா பணத்தையும், 06 கடனட்டைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொள்ளையர்கள் பயன்படுத்திய காரும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்