ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் – ராமதாஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் – ராமதாஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் – ராமதாஸ்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 8:47 pm

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரது தண்டனைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்தாபகர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கையொன்றின் மூலமே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் அப்பாவித் தமிழர்கள் மூவருக்கு எதிராக பின்னப்பட்ட சதி வலையின் முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட ஆரம்பமாகியுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பேரறிவாளன் உள்ளிட்ட மூவரது தூக்கு தண்டனைகளும் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாக இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள பேரறிவாளன், தடா சட்டத்தின் கீழ், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அதே சட்டவிதிகளை பயன்படுத்தி, முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரறிவாளனிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட விதத்தை, புலனாய்வு பிரிவின் கண்காணிப்பாளர் தியாகராஜா ஏற்றுக் கொண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் ராம்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கில் ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அறிக்கை ஒன்றின் மூலம் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக த ஹிந்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்