மட்டக்களப்பில் முதன்முறையாக பாரம்பரிய நெல்லினம் பயிரிடப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் முதன்முறையாக பாரம்பரிய நெல்லினம் பயிரிடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 3:24 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக இம்முறை பெரும்போகத்தின்போது பாரம்பரிய நெல்லினம்  பயிரிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சுமார் 600 ஏக்கரில் மடத்தவாலு, பச்சப்பெருமாள், புருளுத்தொட, கருப்புச்சீமெட்டி போன்ற பாரம்பரிய நெல்லினங்கள் பயிரிடப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகரை, செங்கலடி, வவுணதீவு, ஆரையம்பதி, வெல்லாவெளி, கிரான், களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களிலேயே பாரம்பரிய நெல்லினங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

இந்த நெல்லினங்களை பயிரிடுவதால் மூன்றரை மாதங்களில் அறுவடை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கைக்காக 17 ஆயிரம் கிலோகிராம் பாரம்பரிய விதை நெல்லினங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்