பொலிஸ், காணி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கப்போவதில்லை – பிரபா கணேஷன்

பொலிஸ், காணி அதிகாரங்களை அரசாங்கம் வழங்கப்போவதில்லை – பிரபா கணேஷன்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 8:41 pm

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை ஒருபோதும் அரசாங்கம் வழங்கப்போவதில்லை எனவும், அதற்காக போராடுவதில் எந்தவித பயனும் இல்லை எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேஷன் தெரிவிக்கின்றார்.

இந்த வருடம் புலமை பரிசில் பரீட்சையில் விசேட சித்தி பெற்ற மாணவர்களையும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வொன்று ஜிந்துப்பிட்டி விவேகானந்த சபை மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேஷன்
”ஒரு மாகாண சபை என்றால் எங்களுக்கு கிடைத்துள்ள இரண்டே இரண்டு வரப்பிரசாதங்கள்  கிடைதுள்ளன. பொலிஸ் காணி அதிகாரங்களை ஒருபோதும் அரசாங்கம் கொடுக்கப்போவதில்லை அதற்காக சண்டையிட்டு பிரயோசனமும் இல்லை. எங்களுக்கு நன்றாக தெரியும். மாகாண சபை மூலம் கிடைக்கபெற்றுள்ள விரப்பிரசாதம் கல்வி, சுகாதாரம் போக்குவரத்து மட்டும் தான் சுகாதாரத்தையும் போக்குவரத்தையும் பார்த்தால் மத்திய அரசாங்கம் அதிலும் தலையிட்டு  அதையும் செய்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே எங்களுக்கு கிடைத்துள்ள ஒரே வரப்பிரசாதம் கல்வி தான்”.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்