பாடசாலைகளுக்கு அனுமதிக்குபோது அநாவசியமான பணம் அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை

பாடசாலைகளுக்கு அனுமதிக்குபோது அநாவசியமான பணம் அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை

பாடசாலைகளுக்கு அனுமதிக்குபோது அநாவசியமான பணம் அறவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 2:14 pm

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிக்கும்போது பல்வேறு காரணங்களுக்காக பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு சேர்க்கும்போது பணம் அறவிடப்பட்டால் அது குறித்து அமைச்சுக்கு தெரியப்படுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க கேட்டுள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளும் உள்ளக கணக்காய்வுப் பிரிவு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்

ஒரு சில பாடசாலைகளில் புதிதாக சேர்க்கப்படும் பிள்ளைகளின் பெற்றோரிடம் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் ஊடாக அநாவசியமான முறையில் பணம் பெறப்படுகின்றமை தெரிவந்துள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை அடுத்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்