பாடகியானார் நஸ்ரியா

பாடகியானார் நஸ்ரியா

பாடகியானார் நஸ்ரியா

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 5:36 pm

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக மாறி பிறகு நாயகியானவர்  நஸ்ரியா.

தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் நிறைய படங்களை கையில் வைத்துக் கொண்டு நடித்து வரும் இவர் இப்போது பின்னணிப் பாடகியாகவும் மாறியுள்ளார்.

துல்கர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடிக்கு மலையாள படமான ‘சலால மொபைல்ஸ்’ படத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளாராம்.

சரத் ஏ.ஹரிதாஸன் இயக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார்.

நஸ்ரியா ஏற்கெனவே ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடி ஒரு சிறந்த பாடகியாகவும் நிரூபித்தவர் என்றாலும், திரைப்படத்திற்காக பாடுவது இது தான் முதல் முறை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்