தரமற்ற ஓலி எழுப்பிகள் பொருத்தப்பட்டிருந்த பஸ்கள் கண்டுபிடிப்பு

தரமற்ற ஓலி எழுப்பிகள் பொருத்தப்பட்டிருந்த பஸ்கள் கண்டுபிடிப்பு

தரமற்ற ஓலி எழுப்பிகள் பொருத்தப்பட்டிருந்த பஸ்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 12:25 pm

தரமற்ற ஓலி எழுப்பிகள்  பொருத்தப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் ரசாங்க அழகப்பெரும கூறியுள்ளார்.

தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் பொரும்பாலும் தரமற்ற ஒலி எழுப்பிகளே பொருத்தப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.

இத்தகைய ஒலி எழுப்பிகளை உடனடியாக அகற்றிக்கொள்ளுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் பணிப்புரையை பின்பற்றத் தவறும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்