சுற்றுலா வீசாவில் தொழில் புரிவோரின் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்க முடியாது – மங்கள ரந்தெனிய

சுற்றுலா வீசாவில் தொழில் புரிவோரின் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்க முடியாது – மங்கள ரந்தெனிய

சுற்றுலா வீசாவில் தொழில் புரிவோரின் பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்க முடியாது – மங்கள ரந்தெனிய

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 7:52 pm

சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளில் தொழில்புரிவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வீசாவில் வெளிநாடுகளில் தொழில்புரிவோர் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய  பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாது என வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வீசாவை பயன்படுத்தி மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்கள் பலர் தொழில் புரிவதாக பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சுற்றுலா வீசாவை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரிவதை தவிர்குமாறு வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம், பொது மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்