சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவரத் திட்டம்

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவரத் திட்டம்

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்துவரத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 1:42 pm

சவுதி அரேபியா அறிவித்த பொது மன்னிப்பு காலத்தில் அங்கிருந்து வெளியேறத் தவறிய 200 இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது

இது தொடர்பான நடவடிக்கைகளை சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதாக பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரண்தெனிய கூறியுள்ளார்.

சவுதி அரேபியா அறிவித்திருந்த பொது மன்னிப்பு காலத்தை பயன்படுத்தி அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 15 ஆயிரம் இலங்கையர்கள் நாடு திரும்பியதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்தும் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்