சட்டவிரோத மின்சாரம்; 9 பேர் கைது

சட்டவிரோத மின்சாரம்; 9 பேர் கைது

சட்டவிரோத மின்சாரம்; 9 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 1:32 pm

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பெற்றிருந்த 9 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை மற்றும் பாலமுணை ஆகிய பகுதிகளில் இலங்கை மின்சார சபையின் விசாரணைப் பிரிவினரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் கூட்டாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும் அடங்குகின்றனர்.

சந்தேகநபர்களான 9 பேரையும் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்