கொழும்பு துறைமுகத்தில் 5 ரஷ்ய கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்தில் 5 ரஷ்ய கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்தில் 5 ரஷ்ய கப்பல்கள்

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 7:36 pm

நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் வல்லமை கொண்ட கப்பல் உள்ளிட்ட 05 ரஷ்ய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளன.

அட்மிரல் பன்டெலெயவ், பெரெஸ்வெட், அட்மிரல் நெவெல்ஸ்கை, ஃபொடி கிரைலொவ் மற்றும் பெஷென்கா (ADMIRAL PANTELEYEV) (PERESVET) ( ADMIRAL NEVELSKY) ( FOTIY KRYLOV) (PECHENGA) ஆகிய கப்பல்களே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளன.

மத்திய தரைக்கடலில் இருந்து இந்தக் கப்பல்கள் ரஷ்யாவின், விளாடிவொஸ்டொக் நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் வல்லமை கொண்ட 162 மீற்றர் நீளமான அட்மிரல் பன்டெலெயவ் கப்பலில் 92 பணியாளர்களும், 336 மாலுமிகளும் பணியாற்றுகின்றனர்.

112 மீற்றர் நீளமாக அட்மிரல் நெவெல்ஸ்கை கப்பலில் 24 பணியாளர்களும், 115 மாலுமிகளும் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கப்பல்கள் எரிபொருள் நிரப்புவதற்காகவும், கப்பல் பணியாளர்களின் ஓய்வுக்காகவும் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக கடற்படை மேலும் சுட்டிக்காட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்