ஊரணியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

ஊரணியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

ஊரணியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 4:56 pm

மட்டக்களப்பு ஊரணியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இன்று முற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் சின்ன ஊரணி பகுதியில் மோட்டார் சைக்கிலொன்றும் பால்சேகரிப்பு வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் நேற்று முதினம் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ந இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பால்சேகரிப்பு வாகனத்தின் சாரதி பிரதேசத்தைவிட்டு தலைமறைவாகியிருந்த நிலையில், அவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்நதார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான பால்சேகரிப்பு வாகன சாரதி நீதவானின் உத்தரவிற்கமைய நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் போக்குவரத்து
பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்