அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வே மிகப் பெரிய செய்தி – வசந்த சமரசிங்க

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வே மிகப் பெரிய செய்தி – வசந்த சமரசிங்க

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வே மிகப் பெரிய செய்தி – வசந்த சமரசிங்க

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 8:20 pm

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்று திரட்டவுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிணைப்பிற்கான இணைப்புச் சங்கம் தெரிவிக்கின்றது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட, தொழிற்சங்க ஒன்றிணைப்பிற்கான இணைப்புச் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்து
”அரச ஊழியர்களுக்கு 1200 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்பதே இந்த வரவு செலவுத்திட்டத்திலிருந்த மிகவும் பெரிய செய்தியாகும்.1200 ரூபா போதுமானதாக இல்லை என்றே கூற வேண்டும். கடந்த மாதம் நிறைவடையும் போது 49,300 ரூபா வருமானத்தை பெறும் நான்கு பேரை கொண்ட குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு, வரியாக இரண்டாயிரத்து 633 ரூபா அறவிடப்படுகின்றது. எனினும், அரச ஊழியர்களுக்கு 1200 ரூபா மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கு ஏற்றவாறு ஜனாதிபதியின் செலவீனம் 70 வீதம் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி,  தனது செலவீனங்களை அதிகரித்துக் கொள்ள முடியும் என்றால், நாட்டிலுள்ள ஊழியர்களின் சம்பளத்தை உயர்ந்த முடியாதமைக்கான காரணம் என்ன”.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்த கருத்து
”கல்விக்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதி குறைக்கப்பட்டது. அதனை ஏன் வேலை செய்யும் மக்களின் மீது சுமத்துகின்றீர்கள். எதிர்வரும் ஆண்டு முதலாம் தரத்திற்கு பாடசாலை மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அதேபோன்று, 2 முதல் 13 ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டணங்கள் செலுத்த வேண்டியுள்ளது. வேலிகளை நிர்மாணிப்பதற்கும், வர்ணப்பூச்சுகளை பூசுவதற்கும், வேறு விடயங்களுக்காகவும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இந்த சுமையை நாட்டிலுள்ள வேலை செய்யும் மக்களே சுமக்க வேண்டியுள்ளது”.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்