அரசாங்கத்தினால் வடபகுதி மக்களின் மனதை வெற்றிகொள்ள முடியவில்லை – அர்ஜுன ரணதுங்க

அரசாங்கத்தினால் வடபகுதி மக்களின் மனதை வெற்றிகொள்ள முடியவில்லை – அர்ஜுன ரணதுங்க

எழுத்தாளர் Staff Writer

24 Nov, 2013 | 8:31 pm

வடபகுதி மக்களின் உள்ளங்களை வெற்றிக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வலுவற்ற கொள்கையினாலே சர்வதேசம் தலையீடு செய்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

அளுத்கம பொது மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜூன ரணதுங்க தெரிவித்த கருத்து
”பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இங்கு நடத்தப்பட்டமைக்கு, தனிப்பட்ட ரீதியில்  எதிர்ப்பு கிடையாது. செலவு செய்யப்பட்ட நிதியை நியாயப்படுத்த முடியுமா? பொது நலவாய மாநாடு நடாத்தப்படுவதற்கு முன்னர், மிகவும் அவதானமாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நான் கூறினேன். பொதுநலவாய மாநாட்டிற்கு வருகைத் தந்த பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு சென்று செயற்பட்ட விதத்தினை நாம் பார்த்தோம். நாம் எதிர்க்கட்சியில் இருந்தாலும், யாருக்கும் தலையீடு செய்ய இடமளிக்க முடியாது. எமது நாட்டின் அடையாளத்தை நாம் வைத்துக் கொள்ளவேண்டும். இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது யார்? எமது அரசாங்கம். அரசாங்கம் என்ற ரீதியில் வடப் பகுதி மக்களின் உள்ளங்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை. அதன் பிரதிபலன்களையே நாம் கடந்த காலங்களில் அவதானித்தோம்”.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்