சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

எழுத்தாளர் Staff Writer

19 Nov, 2013 | 9:02 am

பொதுநலவாய மாநாட்டின் பின்னரும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு, சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிப்பதே தற்போது சர்வதேச சமூகத்திற்கு காணப்படும் பாரிய சவாலென சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயக அலுவலகத்தின் பணிப்பாளர் ஸ்டீவ் கிராஷோ குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட கடந்தகால வன்முறைகளுக்கு பொறுப்பானவர்கள், அதற்கு பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.  
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்