ATM இயந்திரத்தில் தரவுகளை பெற முயன்ற சீனப் பிரஜைகளுக்கு கடூழிய சிறை

ATM இயந்திரத்தில் தரவுகளை பெற முயன்ற சீனப் பிரஜைகளுக்கு கடூழிய சிறை

ATM இயந்திரத்தில் தரவுகளை பெற முயன்ற சீனப் பிரஜைகளுக்கு கடூழிய சிறை

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 7:13 pm

கொழும்பிலுள்ள வர்த்தக வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் இலத்திரனியல் கருவியொன்றை பொருத்தி, அதன் தரவுகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்ட மூன்று சீன பிரஜைகளுக்கு இன்று 11 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் மூவரும் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதாக சீன பிரஜைகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
08 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சீன பிரஜைகள் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனையும், 18 இலட்சம் ரூபா அபராதத்தையும் கொழும்பு மேல்நீதிமன்றம் விதித்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்