ஹர்மன் குணரத்னவின் வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

ஹர்மன் குணரத்னவின் வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

ஹர்மன் குணரத்னவின் வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 8:51 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து வெளியேற வேண்டுமென தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் மாத்தறை நகரில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைதாகி, பிணையில் விடுவிக்கப்பட்ட ஹர்மன் குணரத்னவின் வழக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மாத்தறை பிரதம நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான ருவன் சிசிரகுமார முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கி குறித்த இரசாயன பரிசோதனையின் அறிக்கை இதுவரையில் கிடைக்கவில்லை என்பது இதன்போது தெரியவந்தது.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் கைதாகி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை உறுப்பினர் கிருஷாந்த புஷ்பகுமார தனது கடவுச்சீட்டை மீளத்தருமாறு இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
எந்த நாட்டிற்கு, எவ்வளவு காலம் செல்கின்றார் என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர் நீதிமன்றத்தில் மீண்டும் கோரிக்கை விடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்தவருடம் ஜூன் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்