விடுதலைப் புலிகள் அவர்களுக்கு விருப்பமானவற்றை செய்தார்கள் – லலித் வீரதுங்க

விடுதலைப் புலிகள் அவர்களுக்கு விருப்பமானவற்றை செய்தார்கள் – லலித் வீரதுங்க

விடுதலைப் புலிகள் அவர்களுக்கு விருப்பமானவற்றை செய்தார்கள் – லலித் வீரதுங்க

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 9:22 am

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு விருப்பமானவற்றை அவர்கள் செய்ததாகவும், அனைத்திலும் தமக்கென தனியான நடைமுறைகளை கொண்டிந்ததாகவும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில், பொதுநலவாய அமைப்பின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டரீதியாக ”பீ என்றவருக்கு சொந்தமான காணியை ஏ என்ற ஒருவருக்கு விடுதலைப் புலிகள் வழங்க விரும்பினால், இலகுவாக அந்த பி என்பவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவார்கள். ஏ என்ற நபரை சென்று அந்த காணியை பயன்படுத்துமாறு கூறுவார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது சொந்தக் கிராமத்திற்கு திரும்பும் மக்கள் தமது காணிகளை மீளக் கேட்பதாகவும், துரதிஷ்டவசமாக இந்தக் காணிகள் பலவற்றின் உறுதிப்பத்திரங்கள் விடுதலைப் புலிகளினால் எரிக்கப்பட்டுள்ளதாகவும்,  காணிகளின் சரியான தகவல்களை அரச தரவுகளில் இருந்து பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்