மாத்தறை இரட்டைக் கொலைச் சம்பவம்; விசாரணைகளுக்கு எட்டு பொலிஸ் குழுக்கள்

மாத்தறை இரட்டைக் கொலைச் சம்பவம்; விசாரணைகளுக்கு எட்டு பொலிஸ் குழுக்கள்

மாத்தறை இரட்டைக் கொலைச் சம்பவம்; விசாரணைகளுக்கு எட்டு பொலிஸ் குழுக்கள்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 1:17 pm

மாத்தறை கம்புறுப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு எட்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கம்புறுப்பிட்டிய, உல்லல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவரும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக  கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு, தடிகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அவரது மனைவி தடிகளால் தாக்கி கொலை செய்யப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
இந்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக எட்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலையாளிகள் பொலிஸ் உத்தியோகத்தரின் இரண்டு வயது குழந்தைமீதும் தாக்குதல் நடத்தியதுடன் குழந்தை தற்போது கவலைக்கிடமான நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்