மனித உரிமைகளை பாதுகாக்குமாறு சீனா இலங்கையிடம் வலியுறுத்தல்

மனித உரிமைகளை பாதுகாக்குமாறு சீனா இலங்கையிடம் வலியுறுத்தல்

மனித உரிமைகளை பாதுகாக்குமாறு சீனா இலங்கையிடம் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 7:16 pm

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு சீனா வலியுறுத்தியுள்ளது.
பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகள் தொடர்பில் நாடுகள் இடையே வேறுபாடுகள் காணப்படுவதைப் போன்று, மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் வேறுபாடுகள் காணப்படுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சர்வதேச நாடுகள் தீர்க்கமான ஒத்துழைப்பினை வழங்கும் பட்சத்தில், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அந்த நாடு முயற்சி செய்யுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கலாம் என இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட சில சர்வதேச நாடுகள் தெரிவித்துவரும் நிலையில், சீனா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.  
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்