பொலிஸார் 20,000 பேருக்கு விடுமுறை

பொலிஸார் 20,000 பேருக்கு விடுமுறை

பொலிஸார் 20,000 பேருக்கு விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 12:56 pm

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மூன்று நாள் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் இன்ஸ்பெக்டர், உப பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் சார்ஜன், பொலிஸ் கான்ஸ்ரபிள் ஆகிய பிரவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு பொதுநலவாய மாநாடு கடமைகள் நிறைவு பெற்றதும் இந்த விடுமுறை கிடைக்கும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை இந்த மாநாட்டின் பாதுகாப்பு கடமைகளில் சுமார் 20 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்