புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் கூகுள், மைக்ரோசொப்ட் இடையே இணக்கம்

புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் கூகுள், மைக்ரோசொப்ட் இடையே இணக்கம்

புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் கூகுள், மைக்ரோசொப்ட் இடையே இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 6:24 pm

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடாமல் இருப்பதற்கு கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் சிறுவர்கள் தொடர்பான ஆபாச புகைப்படங்கள் மற்றும் துஷ்பிரயோகம் குறித்த படங்களை பிரபல தேடல் இணையத்தளமான கூகுள் மூலம் பெறமுடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சிறுவர் தொடர்பான ஆபாசப் படங்கள் சட்டவிரோதமானவை என்ற அறிவுறுத்தலும் இணையத்தளத்தில் பிரசுரமாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தியிருந்ததுடன் கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
நிபுணத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை பயன்படுத்தி இந்த திட்டங்களை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்