பிரதேசவாசிகள் – விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே மோதல்; நிந்தவூரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரதேசவாசிகள் – விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே மோதல்; நிந்தவூரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

பிரதேசவாசிகள் – விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே மோதல்; நிந்தவூரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 11:57 am


கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியை மறித்து நிந்தவூரில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பிரதேசவாசிகளுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலினை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
விசேட அதிரடிப்படையின் ஐந்து உறுப்பினர்கள் நிந்தவூர் பகுதிக்கு நேற்றிரவு சென்றுள்ளதாகவும், அவர்களில் சிலர் சிவில் உடையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நிந்தவூர் பகுதியில் கடந்த நாட்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டிருக்கலாம் என பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டமையினால் நேற்றிரவு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தற்பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்