நடால் தொடர்ந்தும் முதலிடத்தில்

நடால் தொடர்ந்தும் முதலிடத்தில்

நடால் தொடர்ந்தும் முதலிடத்தில்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 6:11 pm

ஏரீபி டென்னிஸ் தரப்படுத்தலில் ஸ்பெய்னின் முன்னணி வீரர் ரபெயல் நடால் தொடர்ந்தும் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்த ஏரீபி வேல்ட் ரூவர் ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடரில் ஸ்டானிலஸ் வவ்ரிங்காவிற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அவர் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.
இன்று வெளியிடப்பட்ட புதிய தரப்படுத்தலில் பிரகாரம் முதல் 50 இடங்களுக்குள் எந்தவித மாற்றங்கள் ஏற்படவில்லை.
செர்பியாவின் நொவெக் ஜொக்கோவிச் 2ஆம் இடத்திலும் டேவிட் பெரர் மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்டி மரே, ஜுவன் மார்ட்டின் டெல்போற்றோ மற்றும் ரொஜர் பெடரர் ஆகியோர் அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்