தங்கம் கடத்திய இரு இலங்கையர்கள் கைது

தங்கம் கடத்திய இரு இலங்கையர்கள் கைது

தங்கம் கடத்திய இரு இலங்கையர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 5:50 pm

மூன்று கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத்துடன் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தங்கம் இந்திய விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
தமது பயணப் பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்