டேவிஸ் கிண்ணத் தொடர் செக்குடியரசு வசம்

டேவிஸ் கிண்ணத் தொடர் செக்குடியரசு வசம்

டேவிஸ் கிண்ணத் தொடர் செக்குடியரசு வசம்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 10:11 am

டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரை செக்குடியரசு கைப்பற்றியுள்ளது.
சேர்பியாவின் டுசன் லஜோவிக்கை 6-3, 6-1, மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிகொண்ட செக்குடியரசின் ரடேக் ஸ்டபனெக் இந்தத் தொடரை வெற்றிகொள்ள வழிவகுத்தார்.
இதன் பிரகாரம் சேர்பிய அணியை தோற்கடித்த செக்குடியரசு மீண்டும் ஒரு தடவை டேவிஸ் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
சர்வதேச டென்னிஸ் தொடரின் முன்னிலை வீரர் நொவெக் ஜோகொவிச்சும் சேர்பியா  சார்பில் விளையாடியிருந்தார்.
1980 ஆம் ஆண்டு செக்குடியரசு டேவிஸ் கிண்ணத்தை முதல் தடவையாக கைப்பற்றியிருந்தது.
2010  ஆண்டு சம்பியன்ஸ் பட்டத்தை சேர்பிய அணி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்