சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயரில் மாத்தறை நகரில் வீதி

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயரில் மாத்தறை நகரில் வீதி

சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயரில் மாத்தறை நகரில் வீதி

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 1:10 pm


மாத்தறை நகரிலுள்ள வீதியொன்றுக்கு சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நடைபெறற வைபவத்தில் இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்து கொண்டு உரையாற்றினார்.
டலஸ் அழகப்பெரும:-
”எமது நாட்டின் சனத்தொகை 21 மில்லியனாகும். இந்த 21 மில்லியன் மக்களும் இரண்டு மொழிகளையே பேசுகின்றனர். சிங்களம், தமிழ். நாம் அனைவரும் இந்த சிறிய தீவிலேயே வாழ்கின்றோம். எனினும் இந்த சிறிய தீவில் வாழும் 21 மில்லியன் மக்களுக்கு தமது சகோதர மொழியை பேச முடியாது. தற்போது இந்த டலஸ் அழகப்பெரும இந்த முழு நாட்டினதும் இளைஞர் விவகார அமைச்சர். எனினும் தமது சகோதர மொழியான தமிழ் மொழியை பேசுவதற்கு தெரியாது. இதுவே யதார்த்தம். ஏன் இவ்வாறு நடந்தது? எமது அனைத்து விடயங்களிலும் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு தலையீடு செய்தது. எவ்விடத்தில் தவறியது? 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த நாட்டில் சிறும்பான்மை, பெறும்பான்மை என்ற இரண்டு இல்லை என கூறினார். இதனை அன்று அல்ல 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியே கூறியிருக்க வேண்டும்”.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்