சர்வதேச விசாரணைக்கு இலங்கை சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது – திஸ்ஸ

சர்வதேச விசாரணைக்கு இலங்கை சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது – திஸ்ஸ

சர்வதேச விசாரணைக்கு இலங்கை சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது – திஸ்ஸ

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 9:06 pm


பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஊடாக சர்வதேச விசாரணைக்கு இலங்கை சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதுதொடர்பில் கருத்து வெளியிட்டார்.
 திஸ்ஸ அத்தநாயக்க:-
”இந்த மாநாட்டைப் பார்க்கும் போது பல விடயங்கள் நினைவிற்கு வருகின்றன.  இந்த மாநாட்டில் 98 விடயங்களுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.  எனக்கு இதுவொரு நாடகத்தைப் பார்த்தது போன்று தெரிகின்றது. இந்த விடயங்களின் ஊடாக நாம் சர்வதேச பொறிமுறையுடன் இணைந்துள்ளோம். அதில் முதலாவதாக மனித உரிமைகள் தொடர்பிலான நீதிமன்றத்திற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளது.  எனவே இதுவொரு அபாயகரமான நிலமையாகும்.  மனித உரிமை மீறல்கள் தொடர்பில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறே ஐக்கிய தேசியக் கட்சி கூறியது.  அவ்வாறு இல்லாவிடின் எமது உள்ளக விசாரணை மூலம் இதனை நிறைவு செய்யுமாறும் சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினோம்.  எனினும் ஜனாதிபதி என்ன செய்துள்ளார். மனித உரிமை தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கான பின்புலத்தை ஏற்படுத்தும் உடன் படிக்கையில் தெரியாத் தனமாக கையொப்பமிட்டுள்ளார்”.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்