கெமரன் எறும்பு போல் அங்குமிங்கும் ஓடி குழுக்களை சந்தித்தார் – மஹிந்த அமரவீர

கெமரன் எறும்பு போல் அங்குமிங்கும் ஓடி குழுக்களை சந்தித்தார் – மஹிந்த அமரவீர

கெமரன் எறும்பு போல் அங்குமிங்கும் ஓடி குழுக்களை சந்தித்தார் – மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 9:01 pm


பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கைக்கு வருகைதந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரனின் செயற்பாடுகள் தொடர்பாக அரசியல் பிரதிநிதிகள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
கெமரன் வெளியிட்ட கருத்துக்கள் இலங்கையின் இறையாண்மை, சுயாதீன தன்மை மற்றும் பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை பொருட்படுத்தாத தன்மையை காட்டுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதி செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் எறும்பு போன்று, அங்குமிங்கும் ஓடி சில குழுக்களை சந்தித்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாடு முன்னோக்கி செல்கின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க கூறினார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்