இருவேறு விபத்துக்களில்; மூவர் பலி, 21 பேர் காயம்

இருவேறு விபத்துக்களில்; மூவர் பலி, 21 பேர் காயம்

இருவேறு விபத்துக்களில்; மூவர் பலி, 21 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 8:47 pm

எல்பிட்டிய பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
டிப்பர் வண்டியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
விபத்தில் மூன்று ஆண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, நிட்டம்புவ, கலல்கொட பகுதியில் இன்று மாலை இரண்டு பஸ்கள் மோதியதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த பஸ்சும், வறக்காபொலவில் இருந்து நிட்டம்புவ நோக்கிப் பயணித்த பஸ்சும் மோதியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்