அரச தலைவர்கள் நாடு திரும்புவதால் வீதிகள் மூடப்படும் – பொலிஸ்

அரச தலைவர்கள் நாடு திரும்புவதால் வீதிகள் மூடப்படும் – பொலிஸ்

அரச தலைவர்கள் நாடு திரும்புவதால் வீதிகள் மூடப்படும் – பொலிஸ்

எழுத்தாளர் Staff Writer

18 Nov, 2013 | 9:33 am

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற  அரச தலைவர்கள் இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கொழும்பின் சில வீதிகள் அவ்வப்போது மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறுகின்றார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த அரச தலைவர்கள் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்காக இன்றைய தினமும் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
இதன் பிரகாரம் கொழும்பு பழைய பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து, கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்டி சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, செஞ்சிலுவை சுற்றுவட்டம் உள்ளிட்ட வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறுகின்றார்.
அத்துடன் நூலக சுற்றுவட்டம், தாமரைத் தடாக மாவத்தை, ஹோட்டன் பிளேஸ், பேஸ்லைன் வீதி உள்ளிட்ட சில வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைளும் அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும் என ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இதனால் இந்த காலப்பகுதிகளில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்