வியட்நாமில் வெள்ளம்; உயிரிழப்பு 28ஆக அதிகரிப்பு

வியட்நாமில் வெள்ளம்; உயிரிழப்பு 28ஆக அதிகரிப்பு

வியட்நாமில் வெள்ளம்; உயிரிழப்பு 28ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 8:48 pm

வியட்நாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்சை தாக்கிய ஹயான் சூறாவளி வியட்நாமின் வட பகுதியை தாக்கியதில் அங்கு தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது.
இதனையடுத்து 5 மாகாணங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்ததில் சிக்குண்டு 9 பேர் காணாமல் போயுள்ளதாகவும் , சுமார் 80,000 பேர் இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்