வலவே கங்கை பெருக்கெடுத்தது; நீரில் மூழ்கியுள்ளன 100 வீடுகள்

வலவே கங்கை பெருக்கெடுத்தது; நீரில் மூழ்கியுள்ளன 100 வீடுகள்

வலவே கங்கை பெருக்கெடுத்தது; நீரில் மூழ்கியுள்ளன 100 வீடுகள்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 12:37 pm

அதிக மழையுடனான காலநிலையை அடுத்து, வலவே கங்கை பெருக்கெடுத்தமையினால், ஹம்பாந்தோட்டை பகுதியிலுள்ள சுமார் 100ற்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
வாதுருப்ப, அம்பலந்தோட்டை தெற்கு பகுதி மற்றும் தாவால்வில ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் குறிப்பிட்டார்.
குறித்த வீடுகளிலுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நீர் வடிந்து செல்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்