மாணவனால் மாணவி துஷ்பிரயோகம்

மாணவனால் மாணவி துஷ்பிரயோகம்

மாணவனால் மாணவி துஷ்பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 8:11 pm

புத்தளம் வென்னப்புவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் துஷ்பிரயோகபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 17 வயதான பாடசாலை மாணவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட குறித்த மாணவி நேற்றைய தினம் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த மாணவி கடந்த மே மாதம் 24 ஆம் திகதி முதல் பல தடவைகள் சந்தேகநபரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி மருத்துவ பரிசோதனைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்