மயிலந்தன்னை காட்டுப் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

மயிலந்தன்னை காட்டுப் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

மயிலந்தன்னை காட்டுப் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 12:26 pm

வாழைச்சேனை – புனானை மயிலந்தன்னை காட்டுப் பகுதியில் மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
சடலம் உருகுலைந்து காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுளளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம் அடையாம் காணப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்