பொல்லால் தாக்கியதில் பொலிஸ் கான்ஸ்ரபிள், மனைவி பலி

பொல்லால் தாக்கியதில் பொலிஸ் கான்ஸ்ரபிள், மனைவி பலி

பொல்லால் தாக்கியதில் பொலிஸ் கான்ஸ்ரபிள், மனைவி பலி

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 11:21 am


மாத்தறை கம்புறுப்பிட்டிய உலல்ல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரையும் அவரது மனைவியையும் இனந்தியாத சிலர் பொல்லினால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இவர்கள் வசித்த வீட்டுக்குள் நேற்றிரவு நுழைந்த குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொலையாளிகள் பொலிஸ் உத்தியோகத்தரின் இரண்டு வயது மகன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கவலைக்கிடமான நிலையில் குறித்த சிறுவன் கராப்பிட்டிய போதனா வைத்தியாசலையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்ரபிள் மற்றும் அவரது மனைவியே நேற்றி்ரவு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் கடமைகளை நிறைவுசெய்து வீடு திரும்பியபோது இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்