பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நிறைவு

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நிறைவு

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நிறைவு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 6:39 pm

,
22 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடைந்துள்ளது.  
கடந்த வெள்ளிக்கிழமை தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இந்த மாநாடு ஆரம்பமானதைத் தொடர்ந்து பொதுநலவாய அரச தலைவர்கள் பல்வேறு சந்தர்பங்களிலும் சந்தித்து, கருத்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில், அரச தலைவர்கள் ஏற்றுக்கொண்ட 15 யோசனைகள் அடங்கிய கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை மாநாட்டில் 98 விடயங்களுக்கு அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாக, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை நடத்துவதற்கான வாய்ப்பு தென் ஜரோப்பிய நாடான மோல்டாவிற்கு கிடைத்துள்ளது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
இந்த வாய்ப்பு மொரிசீயஸ்க்கு கிடைக்கவிருந்த போதிலும், 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கான பொறுப்பு மொரீசியஸ்க்கு கிடைக்காதென நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்