பாரத ரத்னா விருதை அன்னையர்களுக்கு அர்ப்பணித்தார் சச்சின்

பாரத ரத்னா விருதை அன்னையர்களுக்கு அர்ப்பணித்தார் சச்சின்

பாரத ரத்னா விருதை அன்னையர்களுக்கு அர்ப்பணித்தார் சச்சின்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 10:37 pm

நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல் தமக்கு வழங்கப்படும் பாரத ரத்னா விருதை அன்னையர்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.
இந்தியாவிற்காக 24 வருடங்கள் விளையாடியதை பாரிய ஒர் விடயமாக எண்ணுவதாக குறிப்பிட்ட சச்சின் டெண்டுல்கர், இந்தப் பயணத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் துணையுடன் பல சவால்களை எதிர்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.
ஒய்வு பெறுவது வேதனை அளிக்கவில்லை எனவும். கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கு இதுவே சிறந்த தருணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தனது வாழ்வில் பெரும்பால காலத்தை கிரிக்கெட்டுடன் செலவிட்டதால், ஏதோ ஒருவகையில் கிரிக்கெட்டுடன் தொடர்ந்தும் தொடர்புபட்டிருப்பேன் எனவும் செய்தியாளர் சந்திப்பில் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்