நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 12:32 pm

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.
முந்தல் – கீரியங்கள்ளி பகுதியிலுள்ள குளத்தில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கீரியங்கள்ளி குளத்தில் தாமரை பூ பறிப்பதற்காக சென்ற வேளையிலேயே குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தில் 36 வயதான ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் புத்தளம் வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை, கொகரெல்ல பகுதியிலுள்ள நீச்சல் தடாகமொன்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொட்டதெனியாவ பகுதிலிருந்து சுற்றுலா சென்ற குழுவில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, செவனகல – கிரிஇப்பன்வெவ பகுதியிலுள்ள நீரோடையொன்றில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நுகேகலயாய பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்