நிலக் கண்ணிவெடிகளை அகற்ற மேலதிக நிதியை வழங்க கெமரன் இணக்கம்

நிலக் கண்ணிவெடிகளை அகற்ற மேலதிக நிதியை வழங்க கெமரன் இணக்கம்

நிலக் கண்ணிவெடிகளை அகற்ற மேலதிக நிதியை வழங்க கெமரன் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 6:15 pm

இலங்கையின் வட பகுதியில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 2.1 மில்லியன் ஸ்ரேலிங் பவுன்ஸ் மேலதிக நிதியுதவியை பிரித்தானியா வழங்கவுள்ளது.  
இந்தத் திட்டத்தினை பிரித்தானியா பிரதமர் டேவிட் கெமரூன் அறிவித்துள்ளார்அ
நாட்டில் அதிகளவில் நிலக் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதிகளில், அவற்றை அகற்றுவதற்காக எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கமைய, கடுமையாக பாதிக்கப்பட்ட நிலப்பரப்புகள், மக்கள் பாவனைக்காகவும், போக்குவரத்து மற்றும் கல்விசார் தேவைகளுக்காகவும் மீள வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பிரித்தானியாவின் உதவியின் கீழ், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இந்த நிதி உதவியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளன.
இந்த நிதியின் கீழ், வருடமொன்றுக்கு இரண்டு மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுமென பிரித்தானிய பிரதமரின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கோள்காட்டி, தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்