நிபந்தனையின்றி தெரிவுக்குழுவில் இணைய முடியாது – பொன்.செல்வராசா

நிபந்தனையின்றி தெரிவுக்குழுவில் இணைய முடியாது – பொன்.செல்வராசா

நிபந்தனையின்றி தெரிவுக்குழுவில் இணைய முடியாது – பொன்.செல்வராசா

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 6:22 pm


நிபந்தனைகள் இன்றி தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ள முடியாதென  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாகவும், தெரிவுக்குழுவுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றனர், தெரிவுக்குழுவுக்கு வருவதில் பிரச்சினையில்லை. ”ஒரு நிபந்தனையை தாருங்கள்” என்று தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கேட்பதாக அவர் தெரிவித்தார்.
பொன். செல்வராசா:-
”நிபந்தனையை தருவதற்கு அரசாங்கம் மறுக்கின்றது. விமல் வீரவங்ச, சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களை அமைச்சரவையிலேயே வைத்திருக்கின்றது. தெரிவுக்குழுவிலே வைத்திருக்கின்ற அரசாங்கத்தின் முன்னிலையில் நிபந்தனை இல்லாமல் நாங்கள் தெரிவுக்குழுவிலே பங்குபற்ற முடியுமா?”.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்