ஜனாதிபதி – அரச தலைவர்களிடையே சந்திப்பு

ஜனாதிபதி – அரச தலைவர்களிடையே சந்திப்பு

ஜனாதிபதி – அரச தலைவர்களிடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 8:20 pm


பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த அரச தலைவர்கள் பலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தனர்.
அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொடிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது யுத்த வெற்றியின் பின்னர் இலங்கை பெற்றுக் கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புருணே குடியரசின் சுல்தான் ஹாஜி ஹசன்னல் பொல்கிஆக்கிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வனாட்டு இராஜ்ஜியத்தின் பிரதமர் மொஹானா கார்கேஸ்ஸிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை வனாட்டு இராஜ்ஜியத்தில் நடாத்துவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு அந்த நாட்டு ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை சிங்கப்பூர் பிரதமர் லி சியான் லுன்னிற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
டொங்கா நாட்டின் பிரதமர் எடென்கோ டிவிகானோ, சீசெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் எலேக்ஸ் மையிக்கல், சுவாஸிலாந்து பிரதமர் பர்னார்பாஸ் சிபுசிசோ மற்றும் ருவண்டா ஜனாதிபதி பாவுல் ககமே ஆகியோரும் ஜனாதிபதியை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்