கோயில் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிட்டவர்களுக்கு விளக்கமறியல்

கோயில் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிட்டவர்களுக்கு விளக்கமறியல்

கோயில் உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிட்டவர்களுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 4:28 pm

மட்டக்களப்பு கல்குடா பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், இரண்டு கோயில்களின் கொள்ளை சம்பவங்கள் உட்பட ஒன்பது கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்குடா, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் சந்தேகநபர்கள், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
co[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்