உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி தீப்பந்தப் போராட்டம்

உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி தீப்பந்தப் போராட்டம்

உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி தீப்பந்தப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 8:07 pm


காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி, வவுனியா நகரில் இன்று முற்பகல் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, காணாமற் போனோரைத் தேடும் உறவுகளின் சங்கம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
வவுனியா கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியதுடன், பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி,  பிரஜைகள் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.
 மாவை சேனாதிராசா வெளியிட்ட கருத்து;-
”அந்த மக்களுக்கு விடிவு வேண்டும். தங்கள் உறவுகளையும் தலைவர்களையும் இழந்துவிட்டு நிற்கின்றவர்களின் எதிர்கால வாழ்வாதாரம், அவர்களுடைய வாழ்க்கை, எங்களுடைய பண்பாட்டிலே கணவனை இழந்துவிட்ட ஒரு தாய் அவள் தன்னுடைய நெற்றியிலே எந்தப் பொட்டை இடுவது என கலங்குகிக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகளை இழந்துவிட்ட தாய் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் எங்கே? என்னுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு நான் பெற்றெடுத்த அந்த குழந்தைகள் எங்கே? அந்த உழைப்பவன் எங்கே? உழைப்பவன் எங்கே? என்னுடைய மகன் எங்கே? என்று கேட்கின்ற பெற்றோர்களை காண்கிறோம்”.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்