இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 6:05 pm


யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியபோதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கை வழங்கிய பங்களிப்பிற்கு அபொட் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் 14 ஆயிரம் முன்னாள் உறுப்பினர்கள் குறைந்த காலப்பகுதியில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 7 தொடக்கம் 8 வீத பொருளாதார அபிவிருத்தியும், வடக்கில் 22 வீத அபிவிருத்தியும் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுப்பதற்கு இலங்கைக்கு இரண்டு பாதுகாப்பு படகுகளை வழங்குவதாக அவுஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளார். கடற்படைக்குச் சொந்தமான சயூர என்ற கப்பலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்