”ஆட்ட ஆரம்பம்” என்ற பெயரில் தெலுங்கில் ஆரம்பம்

”ஆட்ட ஆரம்பம்” என்ற பெயரில் தெலுங்கில் ஆரம்பம்

”ஆட்ட ஆரம்பம்” என்ற பெயரில் தெலுங்கில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 5:02 pm

அஜித்தின் ஆரம்பம் படம் தெலுங்கில் ”ஆட்ட ஆரம்பம்” என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்த தீபவாளிக்கு வெளியான படங்களில் ஆரம்பம் படம் ரசிகர்களுக்கு நல்ல மசாலாப் படமாக ருசிக்க வைத்திருக்கிறது. அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்சி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் தமிழில் 100 கோடி வரை வசூலித்து பொக்ஸ் ஒபிஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
அதுமட்டுமின்றி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு, இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரம்  பிடித்துபோக அதன் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது இப்படம் தெலுங்கில் ‘ஆட்ட ஆரம்பம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ஏற்கெனவே, தெலுங்கில் பவன் கல்யானை வைத்து விஷ்ணுவர்தன் இயக்கிய ‘பாஞ்சா’ படம், அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதனால், தெலுங்கு ரசிகர்களுக்கு ‘தல’யின் அதிரடி ஆக்ஷனில் உருவான இப்படம் நிச்சயம் அங்கு வெற்றி பெரும் என்று படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இப்படத்தில் தெலுங்கு நடிகர் ரானா டகுபதி முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்