அரச தலைவர்களுக்கு இடையில் சிநேகப்பூர்வ சந்திப்பு

அரச தலைவர்களுக்கு இடையில் சிநேகப்பூர்வ சந்திப்பு

அரச தலைவர்களுக்கு இடையில் சிநேகப்பூர்வ சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Nov, 2013 | 12:41 pm

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இந்த மாநாடு ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து பொதுநலவாய அரச தலைவர்கள் பல்வேறு சந்தர்பங்களிலும் சந்தித்து கருத்துக்களை பறிமாறிக்கொண்டுள்ளனர்.
இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுக்கு இடையில் இன்று முற்பகல் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, அரச தலைவர்களின் பயணங்கள் காரணமாக கொழும்பு மாநகரில் இன்றும் சில வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
விசேட போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்ளில் சில வீதிகள் மூடப்படுவதாகவும், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்